4வது CISM உலக இராணுவ கடற்கரை கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்-2023ல் சாம்பியன் பட்டம் பிரான்ஸ் வசமானது
11:39am on Friday 17th March 2023
அதிரடி நிரம்பிய 4வது CISM உலக இராணுவ கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் 2023 கடந்த 2023 பெப்ரவரி 17ம் திகதி கரையோர நகரமான நீர்கொழும்பு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளுடன் நிறைவு பெற்றது.ஐந்து நாட்களுக்குள் மொத்தம் 90 விளையாட்டுகள் விளையாடப்பட்டன, இறுதி நாளில் ஏராளமான ரசிகர்கள் நீர்கொழும்பு கடற்கரையில் கூடி பரபரப்பான விளையாட்டு நடவடிக்கையைக் கண்டனர். இறுதிப் போட்டிகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர்கள் ஆடவர் பிரிவில் ஜெர்மன் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.இதேவேளை, பிரமாண்டமான பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பிரான்ஸைச் ஜோடி இலங்கையின் தீபிகா பண்டார மற்றும் குஷானி தாருகா ஜோடியை தோற்கடித்தது.
இந்நிகழ்வில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க, விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்கிரமரத்ன, விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரஞ்சித் சேனாநாயக்க, கட்டுநாயக்கா விமானப்படை தள கட்டளை அதிகாரி , எயார் வைஸ் மார்ஷல் லசித சுமணவீர மற்றும் பணிப்பளார்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்