கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் போர்வீரர்களுக்கான நினைவுத்தூவி திறந்து வைப்பு
12:27pm on Friday 17th March 2023
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் கடந்த 2023 பிப்ரவரி 17ஆம் தேதி கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்


எல் டீ டீ ஈ  பயங்கரவாதிகளிடம் இருந்து தாய்நாட்டை பாதுகாப்பதற்காக உயிர்  தியாகம் செய்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 109 முப்படை அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நினைவுச் சின்னம் நிர்மாணிக்கப்பட்டது இந்த நினைவுத்தூபிக்குகொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம் நிதி உதவி வழங்கியது.

 இந்த நிகழ்வில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ,கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் பாதுகாப்பு படைகள் பிரதாணி  ஜெனரல் சவேந்திர சில்வா  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் முப்படை அதிகாரிகள் பங்கு பெற்றனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை