2023 ம் ஆண்டுக்கான வருடாந்த சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) நாள் ஓட்ட நிகழ்வு.
12:30pm on Friday 17th March 2023
ஜனாதிபதி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபை மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ்  2023 ம் ஆண்டுக்கான வருடாந்த சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் ( CISM ) நாள் ஓட்ட நிகழ்வு கடந்த 2023 பெப்ரவரி 18ம் திகதி கொழும்பு  விமானப்படை ரைபிள் கிறீன் மைதானத்தில்  இடம்பெற்றது இந்த நிகழ்வை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற ) கமால் குணரத்ன அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த ஓட்ட  நிகழ்வில்  இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் விமானப்படை பணிப்பாளர்  சபை உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர்  மேலும் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) பொதுச் செயலாளர், இத்தாலிய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் ராபர்டோ ரெச்சியா, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா , இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஏறக்குறைய 2.5 கி.மீ தூரத்தை கடந்த ‘( CISM ) நாள் ஓட்ட நிகழ்வில்  ஒவ்வொரு படைப்பிரிவில் இருந்து   நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM)ஆனது 1948  பெப்ரவரி  18ம் திகதி   நிறுவப்பட்டது இதன்மூலமாக  உலகளாவிய  ஆயுதப்படைகளுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது.   133 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களை ஒன்றிணைத்து சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM)  செயற்படுகின்றது  

இந்த அமைப்பின்  உறுப்பு நாடுகள் அனைத்தும்  ஒன்றிணைந்து   கையொப்பமிடப்பட்ட CISM இன் பணி அறிக்கையில் அமைக்கப்பட்டுள்ள தத்துவம் மற்றும் இலட்சியங்களுக்கு இணங்க "விளையாட்டின் மூலம் நட்பு" என்ற அதன் குறிக்கோளை அடைவதன் மூலம்  ஆயுதப்படைகளை விளையாட்டின்  ஊடக   ஒன்றிணைத்து உலக அமைதிக்கு பங்களிப்பதாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை