இலங்கை விமானப்படை ரக்பி வீரர் நுவன் பேரேரா நிப்பான் பெயிண்ட் ராக்பி போட்டி தொடரில் அதிக புள்ளிகள் பெற்றோருக்கான விருதை வென்றார்
12:31pm on Friday 17th March 2023
இலங்கை விமானப்படை ரக்பி அணியின் முன்னணி விமானப்படை வீரரான நுவான் பெரேரா தனது தனிப்பட்ட செயல்பாடு மற்றும் திறமை காரணமாக இந்த ஆண்டு இடம் பெற்ற நிப்பான் பெயிண்ட் வழங்கும் ரக்பி லீக் தொடரில் அதிக புள்ளிகளைப் பெற்று சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுக் கொண்டார்

இவர் கண்டி கிங்ஸ் வுட் கல்லூரியின் ரக்பி அணியின் பதில் தலைவராக கடமை ஆற்றிய ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது . 2013 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்த நுவான் தனது திறமைகளை வளர்த்து இலங்கை தேசிய ரக்பி அணியின் பல்வேறு தொடர்களில் பங்குபெற்று இலங்கை விமானப்படைக்கு பெருமிதம் சேர்த்துள்ளார்

மேலும் வாரியர் கிண்ண ஏழு பேர் கொண்ட விமானப்படை அணியின் கேப்டனாகவும் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்ததுடன் 2022 ஆம் ஆண்டு பிளாட் கிண்ண  இரண்டாவது இடத்தினை பெற்று கோப்பை வென்ற 15 பேர் கொண்ட அணியின் தலைவராகவும் இருந்தார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கில் ரக்பி விளையாட்டில் அவரின் அனுபவம் அணிக்கு இன்றியமையாததாகவும் மற்றும் களத்தில் உள்ள முதிர்ச்சி பெற்ற ராக்பி நிபுணத்துவ  வீரர்களினால் பரவலாக பாராட்டப்பட்டு வருகின்றார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை