74 வது தேசிய மல்யுத்த போட்டித்தொடரில் மகளிர் பிரிவில் இலங்கை விமானப்படை வீரர்கள் வெற்றி
12:34pm on Friday 17th March 2023
74 வது தேசிய மல்யுத்த போட்டித்தொடர் கடந்த 2023 பெப்ரவரி 18ம் திகதி மற்றும் 19ம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் உள்ளக அரங்கில் இடம்பெற்றது இலங்கை விமானப்படை மகளிர் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து 6வது முறையாக ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர். விமானப்படை ஆடவர் அணி மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வரலாற்றில் விமானப்படை மகளிர் மல்யுத்த வீரர்கள் மட்டுமே தோற்கடிக்கப்படாத அணியாக இருந்தனர்.
இந்த ஆண்டு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பல எடைப் பிரிவுகளின் கீழ் 300க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை உள்ளடக்கிய ஆயுதப்படை மற்றும் காவல்துறை உட்பட மொத்தம் 20 புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன. இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவும் அதே மைதானத்தில் இடம்பெற்றதுடன் இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சரத் ஹேவாவிதாரண பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படையின் மயுத்த பிரிவின் தலைவர் எயார் கொமடோர் PE குணவர்தன, விமானப்படை மல்யுத்த பிரிவின் செயலாளர், விங் கமாண்டர் வெவாகும்புர மற்றும் பலர் கலந்துகொண்டனர்.