இலங்கை விமானப்படை வெற்றிகரமான தலைமுறையைக் கொண்டாடுகிறது
11:52am on Friday 21st April 2023
72 வருட  அயராத பெருமைமிக்க சேவை பாரம்பரியத்தை  தன்னலமற்று நாட்டை முன்னிலைப்படுத்தி   தேசத்திற்காக  ஆற்றிய பெருமை  மற்றும் கௌரவமான  சேவையை கொண்டாடும் வகையில் இலங்கை விமானப்படை பாரம்பரிய கொக்டெய்ல் விருந்து ஒன்றை கடந்த 2023 மார்ச் 01ம் திகதி  நடத்தியது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  இந்த நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது. விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் அவரது பாரியார்  திருமதி சாமினி பத்திரன ஆகியோர் இந்த  நிகழ்விற்கு பிரதம அதிதியுடன் சென்றனர். விமானப்படைத் தளபதி  அவர்களினால்  முன்மொழிந்த சிற்றுண்டி நிகழ்வை  தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு  நிகழ்வு  தொடங்கியது.

இராஜாங்க  பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி , ஓய்வுபெற்ற அதிகாரிகள், விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை