72வது வருட பெருமிதம் மிக்க ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை விமானப்படையின் அதிகாரிகளுக்கான அதிகரிகாரம் வழங்கும் வைபவம் ஜனாதிபதியின் பங்கேற்பில் இடம்பெற்றது
12:07pm on Friday 21st April 2023
இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் ''  சுரகிமு லகம்பர'' என்ற தொனிப்பொருளில் இலங்கை விமானப்படை தனது 72வது ஆண்டு நிறைவை மார்ச் 02, 2023 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

72 வருடங்களாக இலங்கையை பாதுகாத்து நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து வரும் இலங்கை விமானப்படையின் பெருமைமிக்க பணிக்கு தோள்கொடுக்கும் வகையில் இலங்கை விமானப்படையின் அங்கத்தவர்காளாக  விமானப்படையின்  65ம் இலக்க கேடட் அதிகாரிகள் பயிற்சிநெறி . அதிகாரி பாடநெறி மற்றும் 17 வது கெடட் அதிகாரி பாடநெறி  இல. 35 மற்றும் 37 கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கேடட் அதிகாரி பாடநெறிகளில் பயிற்சிபெற்ற ஆண் மற்றும் பெண்  அதிகாரிகளை அதிகாரத்திற்கு நியமித்தல் மற்றும்  இல 101 ஆம் பாடநெறி விமான ஓட்டுநர்  கடேட் பயிற்சிநெறியினை நிறைவுசெய்த கடேட் அதிகாரிகளுக்கான  உத்தியோகபூர்வ சின்னங்களை அணிவிக்கும்  நிகழ்வு  அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில்  விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்புடன்  2023  மார்ச் 03ம் திகதி  விமானப்படை சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் இடம்பெற்றது

இந்த  அணிவகுப்பு  நிகழ்வுக்கு சீனக்குடா கல்விப்பீடத்தின் கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் தேசப்பிரிய சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதன்போது பாடநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கெடட் அதிகாரிகளுக்கு இங்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டன மேலும்  சிறந்த விமானிக்கான  விருதை கெடட் அதிகாரி விதுர நிமேஷ் பெரேரா வென்றார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன, விமானப்படை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் விமானப்படை அகாடமியின் பீடாதிபதி எயார்  கொமடோர் தேசப்பிரிய சில்வா உட்பட முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் பொலிசார் மற்றும் கெடட் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை