விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றது
12:13pm on Friday 21st April 2023
24வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளின்  இறுதி கட்டம் 2023 மார்ச் 04, ம் திகதி  வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்தில் நிறைவடைந்தது இந்தப் போட்டியானது பொலன்னறுவையிலிருந்து அனுராதபுரம் வரையிலான 132 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியது.

மூன்றாவது கட்டத்தில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பசிந்து திசர முதலாம் இடத்தையும், இலங்கை கடற்படையின் பிரபாஷ் மதுஷங்க மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் நிபுன் சோனல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்று  இறுதி கட்டத்தை முடித்தனர்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பமான பெண்களுக்கான பந்தயம் ஹபரணையிலிருந்து அனுராதபுரம் வரையிலான 84.9 கிலோமீற்றர் தூரத்தையும் கடந்ததுடன், இலங்கை விமானப்படையின் சைக்கிள் வீராங்கனை தினேஷா தில்ருக்ஷி முதலிடத்தையும் சுதாரிகா பிரியதர்ஷன்னி இரண்டாமிடத்தையும், இலங்கை கடற்படையின் ஆன் ஷெனாலி பெரேரா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

பரிசளிப்பு விழா அனுராதபுரம் விமானப்படை தள வளாகத்தில் பிரதம அதிதியாக எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தலைமையில் நடைபெறவுள்ளது.

Men’s race

Women’s race
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை