இலங்கை விமானப்படையின் 51வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்றது
12:28pm on Friday 21st April 2023
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் மட்டக்களப்பு   விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 50வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் ரியென்சி அழகியவண்ண சிறப்புக் கல்லூரியில்   கடந்த 2023 மார்ச் 04ம் திகதி   வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இப்பள்ளியில் ஏறத்தாழ 75 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர், மேலும் அவர்களின் பயன்பாட்டிற்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் நீர் நுகர்வு அலகு நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது

இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் அனுராதபுரம்        விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது   இந்த நிகழ்வில் அனுராதபுரம்     விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குகுரூப் கப்டன் பிரியமல் பெர்னாண்டோவின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் பிரதித் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ ,விமானப்படை சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அனுராதபுர விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா கமகே, உதவி செயலாளர் சேவா வனிதா பிரிவின் ஸ்கொற்றன் ளீடர் கல்ஹாரி விஜேசிங்க, மற்றும்  அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை