விமானப்படை சேவை வனிதா பிரிவினர் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகிறது
2:15pm on Tuesday 9th May 2023
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரனவினால் இலங்கை விமானப்படையின் கர்ப்பிணி பெண்களுக்கு சேவை செய்யும் விசேட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு 2023 மார்ச் 08ம் திகதி  கட்டுநாயக்க ஈகிள்ஸ் லகூன் வியூ விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இந்நிகழ்வில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிலவும் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களான மகளிர் அதிகாரிகள், விமானப் பெண்கள் மற்றும் சிவில் உத்தியோகத்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதே இந்த விசேட வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். பல் மருத்துவம், மருத்துவம் மற்றும் போஷாக்கு ஆகிய துறைகளில் இலங்கை விமானப்படையின் உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆலோசனை நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் அடங்கும்.  குரூப் கப்டன் பிரதீப் ஜெயசாந்த பல் ஆலோசனை நிகழ்ச்சியையும், விங் கமாண்டர் ஹிமாலி மெண்டிஸ் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியையும், ஸ்குவாட்ரன் லீடர் ஷனக திலகரத்ன ஊட்டச்சத்து ஆலோசனை நிகழ்ச்சியையும் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சேவா வனிதா பிரிவுகளின் தலைவர்கள் ,மற்றும் விமானப்படை தளம் கட்டுநாயக்க, இரத்மலானை விமானப்படை தளம், கொழும்பு விமானப்படை தளம், ஏகல விமானப்படை தொழிற்பயிற்சி பள்ளி, விமானப்படை தளம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற விமானப்படை தளங்களின் சேவை பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டுநாயக்கவில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சியைத் தவிர, ஏனைய விமானப்படைத் தளங்களிலும் இதேபோன்ற நன்கொடை நிகழ்ச்சிகள் அந்தந்த தள கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன.
.

SLAF CTS Diyathalawa

SLAF Station Katukurunda

SLAF TTS Ekala

SLAF Base Vavuniya

SLAF Base Hingurakgoda

SLAF Station Sigiriya

SLAF Station Koggala

SLAF Academy China Bay

SLAF Base Anuradhapura

SLAF Station Ampara
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை