இலங்கை விமானப்படை வீர வீரங்களுடன் ஊடக அமர்வில் அசர பிரதிநிதிகள் பங்களிப்பு
12:48pm on Wednesday 10th May 2023
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஷெஹான் சேமசிங்க ஆகியோர்  கடந்த ( 2023 மார்ச் 09   இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

விஜயத்தின் போது, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுடன் குழு உறுப்பினர்கள், முழு விமானப்படை நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய விமானப்படை வீரர்களுடன், தேவைகள் மற்றும் நுண்ணறிவுகளை சேகரிக்கும் நோக்கத்துடன் பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டனர். மேலும் விமானப்படை  வீரர்கள் மற்றும் மகளிர் படைவீராங்கனைகள் ஆகியோரின்  நிர்வாகம் மற்றும் நலனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பது குறித்தும், தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் விமானப்படையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வது போன்ற குறித்த விவாதங்களில் இதன்போது  கவனம்  செலுத்தப்பட்டன .

ஒட்டுமொத்தமாக, குழு உறுப்பினர்கள் விமானப்படை வீரர்களுடன் நேரடியாக ஈடுபடுவதற்கும், எதிர்காலத்தில் இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆழமான புரிதலைப் பெறுவதற்கும் இந்த விஜயம் வாய்ப்பளித்தது.

படைவீரர்கள் மற்றும் பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமைகளை  பாராட்டிய வருகை தந்த குழுவினர் , தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் முப்படைக்கு ஆதரவளிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை