விமானப்படை சேவா வனிதா பிரிவினால் அனுராதபுரத்தில் கப்ருக் பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு.
3:52pm on Monday 15th May 2023
இலங்கை விமானப்படையின் 72 வது வருட நிறைவுதினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பாளர் , எயார் கொமடோர் சுஹர்ஷி பெர்னாண்டோ மற்றும் அனுராதபுர விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி பிரியமல் பெர்னாண்டோ ஆகியோரின் உதவியுடன் விசேட ஆசீர்வாத கப்ருக் பூஜை வழிபாடு அனுராதபுர புனித ருவன்வெளிசேயாவில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அன்று மாலை 'கிலான்பச பூஜை' நிகழ்வும் இடம்பெற்றது .
"கப்ருக் பூஜை"க்காக பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் மலர் அர்ச்சனை செய்த வண்ணமயமான ஊர்வலம் புனித ஜெயஸ்ரீ மஹா போதி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி ருவன்வெலிசேய வரை சென்றது.கப்ருக் பூஜையைத் தொடர்ந்து மகா விகாரை பிரிவேனாவின் பிரதித் தலைவர் வணக்கத்துக்குரிய குடகலவெவ ஞானவிமல தேரர் தலைமையில் தர்ம சொற்பொழிவு இடம்பெற்றது.
இதன்போது வருகை தந்த யாத்திரியர்க்ளுக்கு விமானப்படையினால் பால்காப்பி அன்னதானமும் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.