ஜப்பான்-இலங்கை நற்பு அமைப்பினால் இலங்கை விமானப்படையினருக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் என்பன கையளிக்கப்பட்டது
4:06pm on Monday 15th May 2023
ஜப்பான்-இலங்கை நட்புறவுச் சங்கம், டோஜி குடும்பத்தாரின் பெருந்தன்மையான ஆதரவுடன், இலங்கை விமானப்படைக்கு  நிசான் அம்புலன்ஸ் வாகனம் மற்றும் வாசிப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை 2023 மார்ச் 23ம் திகதி   விமானப்படைத் தலைமையகத்தில்     தூதுக்குழுவினர் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்

இந்த நன்கொடையைப் பாராட்டும் வகையில், ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு இந்த நாளை மறக்க முடியாததாக மாற்றும் நோக்கத்துடன், விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.ஜப்பான்-இலங்கை நட்புறவுச் சங்கத்திற்கும் இலங்கை விமானப்படைக்கும் இடையிலான நட்பு 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமானது மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள், எட்டு அம்புலன்ஸ்கள், மூன்று டர்ன்டபிள் லேடர் வாகனங்கள் மற்றும் ஒரு தீயணைப்பு கார் ஆகியவற்றின் தாராளமான நன்கொடைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஹாஷமா கண்ணாடி நிறுவனத்தின்  தலைவர் திரு. டோஜி எல்சி பிங்கினோ கை  இன் தலைவரும் ஹஷிமா டைகோ  குழுமத்தின் தலைவருமான திருமதி டிஜி கியாகோ டோஸ்ட்டம்  நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.வடநம்பே குனிய  . ஜப்பான் லங்கா நட்புறவு சங்கம்,தலைவர் திரு கலாநிதி லால் திலகரத்ன, விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி சார்மினி பத்திரன, தலைமை தளபதி பணிப்பளர்கள்  கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ. , அதிகாரிகள், விமானப்படையினர் மற்றும் விமானப் பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை