ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 126வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள்
10:31am on Tuesday 16th May 2023
இலங்கையின் மூன்றாவது பிரதமரும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகருமான ஜெனரல் சேர் ஜோன் லயனல் கொத்தலாவல அவர்களின் 126வது பிறந்தநாள் விழா 04 ஏப்ரல் 2023 அன்று நடைபெற்றது. விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த வைபவம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

ஜெனரல் சேர் ஜோன்  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வுபெற்றவர்), கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த் பீரிஸ் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் உறவினர்களான   மங்கள கொத்தலாவல,பிரதம அதிதிகள் அடங்கிய குழு  ஆகியோரின் பங்கேற்பில்  உருவப்படத்திற்கு பிரதம அதிதி மலரஞ்சலி செலுத்தியதோடு விழா ஆரம்பமானது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை