நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) - அபுஜா விமானப்படை தலைமையகத்தை பார்வையிட விஜயம்
நைஜீரிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லூரி - அபுஜாவின் பிரதிநிதிகள் 2023 ஏப்ரல் 25 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். இந்த தூதுக்குழுவிற்கு எயார் கொமடோர் ஒசிசினகா செடு உபாடிகே தலைமை தாங்கினார்.
தூதுக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததுடன், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து சுமுகமாக கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையின் 'மோதலுக்குப் பிந்தைய பங்கு மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் இரத்மலானை விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேராவினால் விளக்கக்காட்சியும், விமானப்படையின் சிரேஷ்ட பணிப்பாக அதிகாரிகளின் பங்களிப்புடன் ஊடாடும் கேள்வி பதில் அமர்வும் இடம்பெற்றது.