இலங்கை சிறைச்சாலை பிரிவு இலங்கை விமானப்படை "ஹெரலி பெரளியுடன் " கைகோர்ப்பு
12:49pm on Tuesday 16th May 2023
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டுதலின்படி "குவான் ஹமுத ஹெரலி பேரலிய" பிரச்சாரம் 2023 ஏப்ரல் 27 சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இணையாக உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான அரசாங்கப் பணிக்கு உதவும் வகையில் பிரதான அரசாங்க நிறுவனங்களுக்கு "ஹேரலி பேரலிய" யோசனையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை விமானப்படை நடத்திய முக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
கட்டளை விவசாய அதிகாரி எயார் கொமடோர் எரந்திக குணவதனே மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் திரு கே.ஏ.எஸ் கொடித்துவக்கு மற்றும் மஹர சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி.கஜநாயக்க உட்பட சிறைச்சாலை திணைக்களத்தின் பல உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், சிறைத் திணைக்களம், பலா உணவுக் கன்றுகளை வளர்ப்பதற்கும், நடவுப் பைகளைத் தயாரிப்பதற்கும் தங்களின் மனிதவளம் மற்றும் நிலப்பரப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் தேசியத் திட்டத்தின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பங்குகொள்ளும் அவர்களின் திறனையும் விருப்பத்தையும் எடுத்துக்காட்டியது.