நாடுபூராகவும் புத்தரின் உன்னதனமான வாழ்வைக்குறிக்கின்றது
2:06pm on Tuesday 16th May 2023
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், சமந்த லங்கா ஷஷனரக்ஷக மண்டலயம், புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து 2567 ஆவது பௌத்த சகாப்தத்தையும் புத்த பெருமானின்  உன்னதனமான வாழ்வை நினைவுகூரும் அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. . 2023 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மாலை சிலாபம் கெபெல்வல ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் முப்பெரும் மகாநாயக்க தேரர்களின் தலைமையில், வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய சமயப் பிரமுகர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது

இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இலங்கை விமானப்படையின் பிரதானி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ,  பாலாவி விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் கோலித வீரசேகர மற்றும் நலன்புரி பணிப்பாளர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.புத்த பெருமானின் உன்னத போதனைகள் மற்றும் பௌத்த நாகரிகத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பல்வேறு சமய நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இந்த விழாவில் இடம்பெற்றன. இலங்கையின் சமய மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வோடு ஒன்றிணைத்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை