விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு.
2:22pm on Tuesday 16th May 2023
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு உயிரிழந்த பணியாளர்களின்   குடும்ப உறுப்பினர்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்  அவர்களுக்கு வீடுகள் அளிக்கும் வகையில்   "குவான் மானுடம்" வீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இதன் முதல் அங்கமாக 2021 ஒக்டோபர் 21 ஆம் திகதி காலமான காலஞ்சென்ற சார்ஜென்ட் பண்டார EMRW அவர்களின் பிள்ளைகளுக்கு  இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையில்   ஒரு முழுமையான வீடு நிர்மாணிக்கப்பட்டு   கையளிக்கப்பட்டது. காலமான காலஞ்சென்ற சார்ஜென்ட் பண்டார  அவர்களின் மனைவியும் மரணமடைந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன  அவர்களினால் கடத்த 2023 மே 10   திகதி இந்த வீடு  அனுராதபுர  கலேன்பிடுனுவெவ, உல்பத்கமவில் கையளிக்கப்பட்டது  

இந்த திட்டம் அனுராதபுர  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் பிரியாமல் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின்  நிதியுதவியுடன்  அனுராதபுர  விமானப்படை தளத்தின் பங்களிப்பில்  நிறைவுசெய்யப்பட்டது. நிர்மாண பணிகள் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் மேற்கொள்ளப்பட்டது

சேவா வனிதா  ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை