மொன்டானா மாநில தேசிய காவலர் உதவி ஜெனரல் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
2:18pm on Tuesday 23rd May 2023
மொன்டானா மாநில தேசிய காவலர் உதவி ஜெனரல்  மேஜர் ஜெனரல் பீட்டர் ஜே. ஹ்ரோனெக்  மற்றும் அதிகாரிகள் கடந்த 2023  மே 17ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை   சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் மேஜர் ஜெனரல் பீட்டர் ஜே. ஹ்ரோனெக் மற்றும் பிரதிநிதிகள் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி வாய்ப்புகளை ஆராய்தல் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர்  இடையிலான நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது இந்த விஜயத்தை கௌரவிக்கும் வகையில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன அவர்கள் மொன்டானா தேசிய பாதுகாப்பு படையின் உதவி ஜெனரல் திருமதி ட்ரேசி ஹொர்னெக்கிற்கு விசேட நினைவு பரிசை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மொன்டானா தேசிய பாதுகாப்பு படையின் நிறைவேற்று அதிகாரி மேஜர் கெவின் டிகென்ஸ், அரச ஒத்துழைப்பு திட்டங்களின் பணிப்பாளர் மேஜர் கிறிஸ்டோபர் கோரே மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டனர்.


No. 02 Heavy Transport Squadron

CBRNE Wing's Demonstration

Aircraft Engineering Wing

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை