விமானப்படை " ஹெரலி பெரேலிய" வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கிறது
3:22pm on Wednesday 24th May 2023
இலங்கை விமனப்படையினால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட " ஹெரலி பெரேலிய" வேலைத்திட்டம் வெற்றிகரமாக நகர்ந்துசெல்கிறது அந்த வகையில் பாடசாலைகளில் அறிமுகமாகி எதிர்வரும் 05 வருடங்களுக்குள் ஒரு மில்லியன் பலாக்கன்றுகளை நடும் முயற்சிகள் இடம்பெறுகிறது உணவுப்பாதுகாப்பு மற்றும் உணவுத்தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது
விமானப்படை அங்கத்தவர்களின் பங்கேற்பில் ஸ்ரீ சுமங்கலா கல்லூரியின் மதிப்பிற்குரிய அதிபர் திருமதி.சினாலி டி சில்வா மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ சுமங்கலா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை விமானப்படை மேற்கொண்டுள்ள இந்த ஊக்கமளிக்கும் முயற்சியானது, தேசத்தின் பாரிய நோக்கங்களுக்கு பங்களிப்பதற்கான கூட்டு உறுதியை எடுத்துக்காட்டுகிறது.நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இளைய தலைமுறையினரை ஈடுபடுத்துவதன் மூலமும், கல்வி நிறுவனங்களை செயல் மையங்களாகப் பயன்படுத்துவதன் மூலமும், இந்த முயற்சி தேசிய இலக்குகள் மற்றும் கல்வி வளர்ச்சியின் இணக்கமான இணைவை எடுத்துக்காட்டுகிறது.