ஜப்பான் -இலங்கை நட்புறவுச்சங்கம் சிகிரியாவிற்கு விஜயம்
11:06am on Tuesday 30th May 2023
ஜப்பான் -இலங்கை  நட்புறவுச்சங்கம் சிகிரியாவிற்கு கடந்த 2023மே 24ம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொண்டு சமூகசேவை திட்டங்களை மேற்கொண்டது இதன்மூலம் இருதரப்பு உறவை    வளர்ப்பதற்கான ஒரு அர்பணிப்பான  வேலைத்திட்டமாகும்

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் சிகிரியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது அப்பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இதன்போது ஜப்பான்-இலங்கை நட்பு சங்கத்தின்  அங்கத்தவர்களான திரு கோடோ ஹிடேகி அவர்களின் பங்கேற்பில்   வாசிப்பு கண்ணாடிகள் மற்றும் புலமை பரிசில்களும்  பாடசாலை மனவர்க்ளுக்கு வழங்கி இருந்தனர்  இந்த நிகழ்வில் இந்நிகழ்வில் கலாநிதி எரங்க ஹசந்தி, சிகிரியா விமானப்படை நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் மற்றும் தல்கோட் ஆரம்பப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சிகள் மூலம், ஜப்பான்-இலங்கை நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை