வவுனியா விமானப்படை தளத்தில் புதிய அணிவகுப்பு மைதானம் மற்றும் போர் நினைவுத்தூபி என்பன திறந்துவைப்பு
12:37pm on Friday 9th June 2023
வவுனியா விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் பி.என்.குணதிலக்க தலைமையில், படைத்தள படையினரால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிவகுப்பு சதுக்கம் 2023 ஜூன் 08 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய அணிவகுப்பு சதுக்கம் சேவை பணியாளர்களிடையே ஒழுக்கம், மரியாதை, ஒருமைப்பாடு, கற்றல் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கிறது.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக ஏர் வாரியர்ஸ் நினைவுச்சின்னம் மற்றும் தளத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ள  பழைய  எஃப்டி-5 போர் விமானம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது.இலங்கை விமானப்படையில் சேவையாற்றிய மற்றும் தொடர்ந்தும் சேவையாற்றும் சிறந்த வீரர்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அடையாளமாக இந்த நினைவுச்சின்னம் அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை