இலங்கை விமானப்படையின் 56வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் இமதுவவில் இடம்பெற்றது
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் கொக்கல    விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 56வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்இமதுவவிலுள்ள வடவான ஆரம்ப பாடசாலையில்   கடந்த 2023 ஜூன் 15ம் திகதி   வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இப்பாடசாலையில் சுமார் 126 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன், அவர்களின் நுகர்வு மற்றும் ஏனைய தேவைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, இத்திட்டத்தின் மூலம் குடிநீர் அமைப்பை நிறுவி, விமானப்படை கொக்கல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் திலின ராஜபக்ஷவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
விமானப்படை சேவை வனிதா பிரிவு மற்றும் கொக்கல  விமானப்படை தளம் ஆகியவை திட்டத்திற்கான நிதியை வழங்கின. இவ்விழாவில் கொக்கல  விமானப்படை தளத்தின்  அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்கள் , கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை