2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை துப்பாக்கி சூட்டு போட்டிகள்
2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை துப்பாக்கி சூட்டு போட்டிகள்  அம்பாறை விமானப்படை தளத்தில்  கடந்த 2023 ஜூன் 12 முதல் 15வரை இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  விமானப்படை பதில் தலைமை தளபதி எயார் வைஸ்  மார்ஷல் பியன்வில அவர்கள் கலந்துகொண்டார்

இந்த தொடரில் முறையே மொரவெவ மற்றும் அம்பாறை படைத்தளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதலாமிடத்தை சுவீகரித்தனர் மேலும் இரண்டாமிடத்தை  வன்னி மற்றும் தியத்தலாவ ஆகிய படைத்தளங்கள் பெற்றுக்கொண்டன.  

மேலும், பலாலி விமானப்படை நிலையத்தைச் சேர்ந்த ஃப்ளைட் சார்ஜென்ட் செனவிரத்ன கேஎன்எல், சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான சிறந்த ஆல்ரவுண்ட் துப்பாக்கி சுடும் வீரருக்கான விருதையும், பெண்கள் பிரிவில் சிறந்த ஆல்ரவுண்ட் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக  கொழும்பு விமானப்படை தளத்தை சேர்ந்த கோப்ரல் இந்தீவரி  மகுடம் சூடினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை