விமானப்படைத் தளபதியினால் 2023 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வெற்றியாளர்கள் கௌரவிப்பு
3:39pm on Sunday 25th June 2023
2023ம் ஆண்டின் விமானப்படையின் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2023 ஜூன் 20 ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டு கவுன்சிலின் (AFSC) தலைவரும் மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் (DSSB) தலைவரும் விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் விமானப்படை ரக்பி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ, கேரம், பீச் வாலிபால், ஸ்குவாஷ், டேக்வாண்டோ மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகிய விளையாட்டுகளில் வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர். இந்த விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறந்து விளங்கினர். இதேவேளை, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சிறந்து விளங்கிய திறமையான விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படை விளையாட்டு கவுன்சில் விசேட பரிசுகளை வழங்கியது.
சிறப்பு வீரர்களை தவிர, விமானப்படை ரக்பி தலைமை பயிற்சியாளர், திரு. ஷாம்லி அஃப்ராஸ் நவாஸ் மற்றும் உதவி பயிற்சியாளர், திரு. டிலான் சொய்சா, விமானப்படை குத்துச்சண்டை பயிற்சியாளர், கோப்ரல் ஆரியரத்ன, விமானப்படை மகளிர் மல்யுத்த அணி பயிற்றுவிப்பாளர், கோப்ரல் பெர்னாண்டோ மற்றும் விமானப்படை பீச் வொலிபால் பயிற்சியாளர் திருமதி. பி.ஜி.எஸ்.குணசிங்க, ஆகியோருக்கு விமானப்படை பெயரை உயர்வாக நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காக விமானப்படை தளபதியினால் விசேட பாராட்டு வழங்கப்பட்டது.
இதன்போது நிகழ்வில் விமானப்படை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க மற்றும் விமானப்படை வலைப்பந்து சம்மேளனத்தின் செயலாளர் குரூப் கப்டன் கிரிஷாந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு விமானப்படை தளபதியினால் “நைட்” என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தலைமை தளபதி , பிரதி தலைமை தளபதி , விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விளையாட்டுப் பணிப்பாளர், விளையாட்டு பிரிவு தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் தொடர்புடைய விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.