விமான உதிரி பாகங்கள் மேற்பரப்பு சுத்திகரிப்பு மையம் விமானப்படை தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.
3:59pm on Sunday 25th June 2023
பாலாவி இலங்கை  விமானப்படை தளத்தில்  புதிதாக நிறுவப்பட்ட விமான உதிரி பாகங்கள் மேற்பரப்பு சிகிச்சை மையம் 2023  ஜூன் 20 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.  விமானப்படையின் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதில் இது ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

பாலாவி இலங்கை  விமானப்படை தளத்தில்  புதிதாக நிறுவப்பட்ட விமான உதிரி பாகங்கள் மேற்பரப்பு சிகிச்சை மையம் 2023  ஜூன் 20 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.  விமானப்படையின் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதில் இது ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இதன்மூலம் F-7 மற்றும் K-8 விமானங்களை மாற்றியமைக்கும் செயல்பாட்டின் போது உதிரி பாகங்களின் மேற்பரப்பு சிகிச்சையை எளிதாக்குவதற்கு  முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பணிமனையின் வடிவமைப்பை சீனா ஏவியேஷன் டெக்னாலஜி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் நிபுணர்கள் குழு மேற்கொண்டதுடன்  பழுதுபார்ப்பு மற்றும் உபகரணங்கள் நிறுவுதல் ஆகியவை அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன
.
இந்த மேற்பரப்பு சிகிச்சை மையம் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி பரந்த அளவிலான மேற்பரப்பு பூச்சுகளைக் கொண்டுள்ளதோடு மின் முலாம் ,பிரகாசமான பூச்சுகள் பபல்வேறு வகையான மேற்பரப்பு  முறைகள் என்பன சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன இயந்திரங்களின் வெற்றிகரமான செயல்பாடு விமானப்படையின் பொறியியல் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சகோதர சேவைகள் மற்றும் வெளி நிறுவனங்களுக்கு மதிப்புமிக்க சொத்தாக செயல்படுகிறது.துறைமுக அதிகாரசபை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அமைப்புகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வசதிகளை விரிவுபடுத்த முடியும்.

இந்த திறப்பு விழாவில் விமானப்படை தலைமை தளபதி , பிரதி தலைமை தளபதி ,பணிப்பாளர்கள் , , கட்டுநாயக்க விமானப்படை தள விமான பராமரிப்பு  பிரிவின் கட்டளை அதிகாரி  மற்றும் சீன தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பிரதிநிதிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை