2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை அணிவகுப்பு மற்றும் இசை வாத்திய போட்டிகள்
4:04pm on Sunday 25th June 2023
2023ம் ஆண்டுக்கான 'இடைநிலை அணிவகுப்பு மற்றும் பேண்ட் மற்றும் இன்டர் ஸ்கூல் கேடட்களின் மேற்கத்திய இசைக்குழு போட்டிகள்' கடந்த 2023 ஜூன் 21ம் திகதி கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் அணிவகுப்பு சதுக்கத்தில் வெகு சிறப்பாக நிறைவு பெற்றது. நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற இந்த முக்கிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 23 அணிகள் பயிற்சி போட்டியில் பங்கேற்றன. இவற்றில் இருந்து ரத்மலானை விமானப்படை தளம், தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளி மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளம் ஆகிய மூன்று அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
தியத்தலாவை, விமானப்படை தளம் ஸ்கொற்றன் லீடர் நிரோஷான் மயூரங்க தலைமையிலான அணி, சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி சம்பியனாக வெளிப்பட்டதுடன்,எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவிடமிருந்து சம்பியன்ஷிப் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது. ஸ்கொற்றன் லீடர் நிரோஷன் கங்கொடவில தலைமையிலான இரத்மலான விமானப்படை தளத்தின் அணி இரண்டாவது இடத்தையும், பிளைட் லெப்டினன் பிரசாத் பெரேரா தலைமையிலான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
இந்த வருடப் போட்டியானது, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் சிந்தனையில் உருவான இண்டர் ஸ்கூல் கேடட்களின் மேற்கத்திய இசைக்குழுக்களுக்கு இடையிலான ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தியது. உற்சாகமான போட்டியைத் தொடர்ந்து குருநாகல் புனித அன்னாள் கல்லூரியும் ஹொரணை வித்யாரதன பல்கலைக்கழகக் கல்லூரியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.இறுதியில், குருநாகல் புனித அன்னாள் கல்லூரி, போட்டியில் சிறந்த பாடசாலை கேடட்களின் மேற்கத்திய இசைக்குழுவாக வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்