இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பதவியேற்றார்.
7:06pm on Tuesday 4th July 2023
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கவினால் எயார் மார்ஷல் என்ற மூன்று நட்சத்திரத் தரத்திற்கு உயர்த்தப்பட்டதன் பின்னர் இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ 2023 ஜூன் 30ம்  திகதி விமானப்படை தளபதி தலைமையகத்தில் பணியை ஆரம்பித்தார்.

19வது விமானப்படைத் தளபதிக்கு விமானப்படையின் வண்ணப் அணிவகுப்பு படை பிரிவின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுன் , பின்னர் முழு விமானப்படையினருக்கும் தனது தொடக்க உரையை வழங்கினார். இந்த உரை முழு விமானப்படைக்கும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது, மேலும் அனைத்து அதிகாரிகள்,மற்றும் படைவீரர்கள்  மற்றும் சிவில் ஊழியயர்கள்  தொடக்க உரையை காண முடிந்தது.

தனது கன்னி உரையில் எயார் மார்ஷல் ராஜபக்ஷ, அவர்கள்  கூறியதாவது  தம் மீது நம்பிக்கை வைத்து 19ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அதிமேதகு  ஜனாதிபதிக்கு  தனது நன்றியை  தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவுக்கு (ஓய்வு) அவர்களினால்   தன்மீது மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்தார். 30 வருட மனிதாபிமான நடவடிக்கைகளில் விமான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குபற்றிய தனது 35 வருட அனுபவம் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியின் மூலம்பெற்றுக்கொண்ட  முகாமைத்துவ திறன்கள் போன்றவற்றின் மூலம்   இலங்கை விமானப்படையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சம்பிரதாய நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஆரம்ப ஊடகவியலாளர் சந்திப்பில் எயார் மார்ஷல் ராஜபக்ஷ கலந்து கொண்டு அச்சு மற்றும் இலத்திரனியல   ஊடகவியலாளர்களுடன் உரையாற்றினார். தொடக்கத்தில், விமானப்படைத் தளபதி ஊடகப் பங்காளிகளின் தொழில்முறை, நேர்மை மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலுக்கான அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார், இது பொதுமக்களை சென்றடையவும், விமானப்படை மீது பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கவும் வழி வகுத்தது.  பின்னர், இலங்கை விமானப்படையின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தும் முக்கிய நோக்கங்கள் குறித்து விமானப்படைத் தளபதி விளக்கினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை