
ஏக்கல விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
1:42pm on Thursday 6th July 2023
ஏக்கல விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் குருவிட்ட அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மார்டினோ அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 05ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
2022 ஆகஸ்ட் 31 ம் திகதி முதல் ஏக்கல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மார்டினோ அவர்கள் தற்போது விமானப்படை தலைமயக்கத்தில் தர உத்தரவாத பணிப்பாளராகவும் மற்றும் விமான தரை ஆதரவு மற்றும் ஆயுத பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளராகவும். பொறுப்பேற்கவுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பதில் கட்டளை அதிகாரி அவர்கள் இதற்கு முன்னர் அடிப்படை ஆர்செற்ப்பு பிரிவின் மூத்த அதிகாரியாக கடமையாற்றினார்