விமானப்படை ரெஜிமென்ட் விடேச படைப்பிரிவு 20 வது வருட நிறைவுதினம்
5:14pm on Tuesday 11th July 2023
விமானப்படை படைப்பிரிவு சிறப்புப் படை (RSF) தனது 20வது ஆண்டு விழாவை கடந்த 07 ஜூலை 2023 அன்று பெருமையுடன் கொண்டாடியது. 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திகதி ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் நிறுவப்பட்ட விமானப்படை தளங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு (ABDR) படைப்பிரிவாக நிறுவப்பட்டது பின்னர் 2006 ஆம் ஆண்டில், படைப்பிரிவு சிறப்புப் படை (RSF) என மறுபெயரிடப்பட்டது. பின்னர், இந்த படைப்பிரிவு சிறப்புப் படையானது அதன் செயல்பாட்டு மற்றும் பயிற்சி திறன்களை விரிவுபடுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டு மொரவெவ விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டது.
அன்றய தினம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுமித் பண்டார அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது வளாகத்தில் மரமொன்றும் நடப்பட்டு படைப்பிரிவினரின் பங்கேற்பில் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது.