
அனுராதபுர ஜய ஸ்ரீ மஹா போதியில் இலங்கை விமானப்படை தளபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்
8:37pm on Saturday 22nd July 2023
புதிதாக பதவியேற்றதன் பின்பாக பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் அனுராதபுர ஜெய ஸ்ரீ மஹா போதியில் மாதவழிபாடுகளில் கடந்த 2023 ஜூலை 15ம் திகதி ஈடுபட்டார்.
இதன்போது ருவன்வெலிசாய அடமஸ்தானாதிபதி பிரதான சங்கநாயக வணக்கத்துக்குரிய .பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர் அவர்களை சந்த்தித்து ஆசீவாதமும் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்வில் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .இனோகா ராஜபக்ஷ, மற்றும் தளபதியின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படையின் ஏனைய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
































