இரணைமடு விமானப்படை தளத்தினால் விசேட சமூகசேவைத்திடம்
8:39pm on Saturday 22nd July 2023
இரணைமடு விமானப்படை தளத்தினால் கடந்த 2023 ஜூலை 14ம் திகதி விசேட சமூகசேவைத்திடம் ஓன்று மேற்கொள்ளப்பட்டது அந்தவகையில் படைத்தளத்திற்கு அருகாமையில் வசிக்கும் குறைந்த வருமானம்கொண்ட குடும்பங்களுக்கும்,படைத்தளத்துன் தொடர்புடைய சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவை வழங்கும் நோக்கில் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டது மேலும் இரணைமடு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சுலோச்சனா மாரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிளிநொச்சி கல்மடுநகர் ஆரம்ப பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஃபார்ம்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. கிளாரன்ஸ் மென்டிஸ் அவர்களின் தாராளமான அனுசரணையின் மூலம் இந்த முயற்சி சாத்தியமானது.
ஃபார்ம்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. கிளாரன்ஸ் மென்டிஸ் அவர்களின் தாராளமான அனுசரணையின் மூலம் இந்த முயற்சி சாத்தியமானது.