ஆனந்த கல்லூரியினால் இலங்கை விமானப்படை தளபதிக்கு பாராட்டு
8:54pm on Saturday 22nd July 2023
சமூகத்தில் மிக உயர்ந்த அங்கீகாரத்தையும் சாதனைகளையும் படைத்தவர்களை அங்கீகரிக்கும் மரபுக்கு அமைவாக, கொழும்பு ஆனந்தா கல்லூரி, புதிதாக நியமிக்கப்பட்ட 19ஆவது விமானப்படைத் தளபதி மற்றும் அதன் முன்னாள் மாணவரான எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவுக்கு அதி உயர்  கௌரவத்தை கடந்த 2023 ஜூலை 17ம் திகதி கல்லூரிவளாகத்தில் வைத்து  வழங்கியது.

ஆனந்தா கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கி  சிறப்பான கோலாகலமாக இவ்விழா இடம்பெற்றது. கல்லூரியின் குட்டி சாரணர்கள் மற்றும் சாரணர்களினால் எயார் மார்ஷல்  உதேனி ராஜபக்ஷவை  அவர்களுக்கு உற்சாகமான கம்பீரமான சிகப்பு கம்பள வரவேற்புடன்  வணக்கத்துடனும்  வரவேற்பு வழங்கப்பட்டதுடன் கேடட் பிளட்டூன் மற்றும் கேடட் பேண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் தளபதிக்கு மரியாதை வழங்கப்பட்டது.     கடந்தகால ஆனந்தியர்களின் சிறப்புமிக்க ஒன்றுகூடல் முழு பலத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனந்தா கல்லூரியில் இருந்து உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில், கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள போர்வீரர் நினைவுத்தூபியில் தளபதி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, தளபதியை பாரம்பரிய வெஸ் நடனக் கலைஞர்கள் வண்ணமயமான ஊர்வலத்தில் குலரத்னா மண்டபத்திற்குச் சென்றனர். ஆனந்தா கல்லூரியின் தற்போதைய அதிபர் திரு.லால் திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய அன்பான வரவேற்பு உரையுடன் பாராட்டு விழா ஆரம்பமானது. மதிப்புமிக்க பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்யும் உன்னத மகன்களை உருவாக்கும் ஆனந்தா கல்லூரியின் வரலாற்று பாரம்பரியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் தெரிவிக்கையில், எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில் கல்வி மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட விடயங்களில் சிறந்து விளங்கியவர் எனவும், தற்போது விமானப்படையில் உயர் பதவிக்கு உயர்ந்துள்ளமையும் அவரது  மகத்தான பெருமையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக உள்ளது.  

எயார் மார்ஷல்உதேனி ராஜபக்ச தனது பதிலில், தனது சாதனைகளுக்கு தனது அன்புக்குரிய ஆனந்தா கல்லூரியில் பெற்ற நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களே காரணம் என மனதார ஒப்புக்கொண்டார். தற்போதைய ஆனந்திகளுடன் நேரடியாகப் பேசிய அவர், ஆனந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியின் போது பெற்ற வலுவான அடித்தளம் விமானப்படையின் 19 வது தளபதியாக நியமிக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்பதை வலியுறுத்தினார். ஆனந்தா கல்லூரியில் தான் பணியாற்றிய காலத்தில் சேவையாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் தளபதி அவர்கள் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

தளபதியின் உத்வேக உரையைத் தொடர்ந்து, கல்லூரியின் அதிபரினால் அவருக்கு கௌரவமான "ஆனதாபிநந்தன" சிறப்புப் பாராட்டுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் இந்த முக்கியமான தருணம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் பிரபல அரசியல்வாதியுமான கௌரவ. கரு ஜயசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), முப்படை பழைய ஆனந்திகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை