
2023 ம் ஆண்டுக்கான வலைப்பந்து இடைநிலை போட்டிகள்
3:56pm on Wednesday 26th July 2023
2023ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்கிடையிலான வலைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 2023 ஜூலை 20ம் திகதி கொழும்பு சுகாதார முகாமைத்துவ மையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. எனோகா ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார் மேலும். விமானப்படை வலைப்பந்து,பிரிவின் தலைவர் எயார் கொமடோர் சுரேகா டயஸ், ரத்மலானை விமானப்படைத் தள கட்டளை அதிகாரி , எயார் கொமடோர் அமல் பெரேரா, கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் ரத்மலான விமானப்படைத்தளம் வெற்றிபெற்றது இரண்டாம் இடத்தை சீனக்குடா விமானப்படை பெற்றுக்கொண்டது