2023 ம் ஆண்டுக்கான விமானப்படையின் இந்து சமய வழிபாடுகள்
2023 ம் ஆண்டுக்கான  விமானப்படையின் இந்து சமய வழிபாடுகள்
விமானப்படையில் பணியாற்றிய போது உயிரிழந்தவீரர்களை  நினைவு கூறும்  இந்து சமய நிகழ்வு கடந்த  2023 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பு 10 கப்டன் தோட்டத்திலுள்ள ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலயத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விமானப்படையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்து சமய வழிபாடுகள் இறுதி யுத்தத்தின் போது தாய்நாட்டிற்காக உயிர்  தியாகம் செய்த விமானப்படை வீரர்கள்  மற்றும் சேவையின் போது இறந்த விமானப்படை உறுப்பினர்கள் மற்றும் தற்போது  கடமையாற்றிவரும்   விமானப்படை அங்கத்தார்கள்  மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை தளங்களுக்கான ஆசீர்வாதம் பெறுபவதற்காக இடம்பெறுகிறது.

இந்த நிகழ்வில்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ மற்றும் விமானப்படை தலைமை தளபதி  மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை