விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணியினர் பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது
8:27am on Thursday 17th August 2023
இலங்கை விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணியானது 2023 ஜூலை 28 அன்று இலங்கை விமானப்படை கட்டுநாயக்க கிரிக்கெட் மைதானத்தில் இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 04 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு சேவைகள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்களைப் பெற்றது.,
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்களைப் பெற்றது.,
இரண்டாவது இன்னிங்ஸின் 48.4 ஆவது ஓவரில் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் அந்த இலக்கை கடந்தது. 48.4 ஓவர்களில் 06 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது விமானப்படை வீராங்கனை . கோப்ரல் டெலனி மனோதரா 92 ஓட்டங்களையும் , சார்ஜன்ட் ஓஷதி ரணசிங்க 34 ஓட்டங்களையும் , கோப்ரல் அமா காஞ்சனா 20 ஓட்டங்களையும் பெற்றனர். டெலானி மனோதராவுக்கும் ஓஷதி ரணசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு போட்டியின் வெற்றிக்கு வழிவகுத்தது. பந்துவீச்சில் சாமரி பொலோகம்பலா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மல்ஷா ஷெஹானி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதேவேளை, ஒஷாதி ரணசிங்க மற்றும் தாருக ஷெஹானி ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விமானப்படை கட்டுநாயக்க தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எல்.எச்.சுமணவீர, இலங்கை விமானப்படை கிரிக்கெட் தலைவர் குரூப் கெப்டன் எஸ்.பி ஜயசிங்க, இலங்கை இராணுவ கிரிக்கெட் கமிட்டி தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம்.அபேசேகர, அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதிகாரிகள் பங்கேற்றனர்.