விமானப்படைக்கு சொந்தமான PT-6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது
12:04am on Thursday 31st August 2023
சீனக்குடா விமானப்படை அகாடமியின் நம்பர் 1 பறக்கும் விமானிகளுக்கான விமான ஓட்டுதல் பயிற்ச்சி பிரிவுக்கு சொந்தமான PT-6 பயிற்சி விமானம் 07 ஆகஸ்ட் 2023 அன்று காலை வளாகத்திற்குள் விபத்துக்குள்ளானது. சீனா துறைமுக விமான நிலையத்தில் இருந்து காலை 11.25 மணியளவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் 11.27 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் விமானி, விங் கமாண்டர் தரிந்து ஹேரத் மற்றும் பொறியியலாளர், விமான அதிகாரி பெஷான் வர்ணசூரிய ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. மேலும் விமானப்படை தளபதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டார்.
விங் கமாண்டர் தரிந்து ஹேரத் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவராவார் மற்றும் 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் 49வது வழமையான கடமை பைலட் கிளையில் கேடட்டாக சேர்ந்தார். மேலும், விமான அதிகாரி பேஷான் வர்ணசூரிய குருநாகல் புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வான் மற்றும் பொது பொறியியல் கிளையின் 35வது உள்வாங்கலில் 2017 இல் இலங்கை விமானப்படையில் கேடட்டாக இணைந்தார்.