ஜப்பான் -இலங்கை நற்பு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடை
8:50pm on Thursday 31st August 2023
திருமதி மொரிசாகி யோஷி மற்றும் ஜப்பான்-சிலோன் நட்புறவு சங்கத்தின் ஊழியர்களின் தாராளமான ஆதரவுடன், ஆம்புலன்ஸ் மற்றும் இலங்கை விமானப்படையில் பணியாற்றும் அதிகாரிகளின் தகுதியான பாடசாலை மாணவர்களுக்கு 05 புலமைப்பரிசில்கள் மற்றும் ஒரு தொகை வாசிப்பு கண்ணாடிகள் என்பன 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி இலங்கை விமானப்படைக்கு  கையளிக்கப்பட்டன.

விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அம்புலன்ஸ் வண்டியை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவிடம் கையளித்தனர். இந்நிகழ்வு தலைமை தீயணைப்பு அதிகாரி குரூப் கப்டன் சஞ்சய் விதானாவின் ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் பணிப்பாளர் நாயகம் விமான செயற்பாடுகள், எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் எயார் வைஸ் மார்ஷல் (வைத்தியர் ) லலித் ஜயவீர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தினத்தை  போற்றும் வகையில், ஜப்பானிய தூதுக்குழுவினருக்கு அந்நாளை மறக்கமுடியாததாக மாற்றும் வகையில் சிறப்பு கலாசார நிகழ்ச்சி ஒன்று விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கத்திற்கும் இலங்கை விமானப்படைக்கும் இடையிலான நட்பு 2015 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமானதுடன், தீயணைப்பு இயந்திரங்கள், அம்புலன்ஸ்கள்,   வாசிப்பு கண்ணாடிகள்  மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் என்பன நன்கொடையாக வழங்கப்பட்டதன் மூலம் வலுவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில், சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி எனோகா ராஜபக்ஷ, திருமதி மொரிசாகி யோஷி உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜப்பான் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர், ஜப்பான் இலங்கை நட்புறவு சங்கத்தின் உப தலைவர் கலாநிதி லால் திலகரத்ன, இலங்கை விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள்  கொழும்பு விமானப்படை தளத் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் குழு மற்றும் ஏனைய அணிகள் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை