உலக பாதுகாப்பு சேவைகள் ரக்பி போட்டியில் இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணி மூன்றாவது இடம்.
11:05pm on Saturday 23rd September 2023
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 27 வரை ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற முதல் உலக பாதுகாப்பு சேவைகள் ரக்பி போட்டியிலும், 2023ம் ஆண்டுக்கான முதல் பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் ரக்பி போட்டியிலும் இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணி மூன்றாவது இடத்தை  பெற்றுக்கொண்டது .  இந்த தொடரில் ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெலாரஸ், வங்கதேசம் போன்ற நாடுகள் பங்கேற்றன.

இந்த தொடரில் ரஷ்யாவும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன, ரஷ்யா  தங்கள் போட்டியாளரான தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது, மேலும் தென்னாப்பிரிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்தது.  "விளையாட்டு மூலம் நட்பு". எனும் கருப்பொருளை அடங்கியே இந்த தொடர் இடம்பெற்றது.

இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணி சார்பாக இலங்கை விமானப்படை வீரர்கள் 4பேருடன்,இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை வீரர்கள் அடங்களாக உற்பட மொத்தம் 13 வீரர்கள் பங்குபற்றினர் .

பாதுகாப்பு சேவை ரக்பி அணியின் தலைவராக இலங்கை இராணுவத்தை சேர்ந்த அஷான் பண்டார வழிநடத்தியதோடு இலங்கை கடற்படையின் கொமடோர்.  பிடிகல அவர்கள் மொத்த குழுத்தலைவராகவும்,அணியின் முகமையாளராக பிரிகேடியர் டி.கே.அலுத்தெனிய   ஆகியோர் இலங்கை பாதுகாப்பு சேவைகள் அணியை வழிநடத்துகின்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை