இலங்கை விமானப்படையின் இல 02 போக்குவரத்து படைப்பிரிவு தனது பெருமைமிக்க 66 வது வருடத்தில் தடம்பதிக்கின்றது.
8:36pm on Monday 2nd October 2023
நாட்டிற்காக பெறுமதிமிக்க சேவையினை செய்துவரும் C -130 ரக விமானம் மற்றும் AN -32 விமானங்களை இலங்கை விமானப்படையின் "Heavy Lifters", என்று அழைக்கப்படும் இல 02 போக்குவரத்து படைப்பிரிவு தனது 66 வது வருடத்தில் செப்டம்பர் 01 ம் திகதி தடம்பதிக்கின்றது.இந்த படைப்பிரிவிற்கு தற்போதைய இலங்கை விமானப்படை தளபதியான எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இந்த படைப்பிரிவின் விமானியக்காவும் கட்டளை அதிகாரியாகவும் , பணியாற்றியுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.
1959 ம் ஆண்டில் , செப்டம்பர்மாதம் இரண்டு டி-ஹவில்லாண்ட் ஹெரான் விமானங்கள் இங்கிலாந்திலிருந்து கொள்வனவு செய்ததன்மூலம் இந்த படைப்பிரிவு செயல்பாட்டு திறனை மேம்படுத்த முடிந்தது. ஹெரான் விமானங்களின் வருகையுடன், ராயல் சிலோன் விமானப்படையின் சர்வதேச நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பு செய்யப்பட்டது, இது கிழக்கில் இந்தோனேசியா மற்றும் மேற்கில் கெய்ரோ வரை நீட்டிக்கப்பட்டது.
1973 இல், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான ஹெலி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் கன்வேயர் 440 விமானங்கள் இல . 02 போக்குவரத்துப் படையில் சேர்க்கப்பட்டதுடன். 1975 இல் DC 3 டகோடாஸ் மற்றும் 1979 இன் பிற்பகுதியில் HS 748 Avro விமானங்கள் இல. 02 படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டது .
மேலும் 1983 மற்றும் 1985 க்கு இடையிலான காலப்பகுதியில் இந்த படைப்பிரிவில் மூன்று சியா மார்செட்டி SF 260TP விமானங்கள், அவ்ரோ விமானமும் பீச் கிங் விமானமும் இணைத்து கொள்ளப்பட்டது. SF 260 TPs விமானம் பறக்கத் தொடங்கியதும்,முதலாம் ஈழப்போரின்போது நாட்டிற்கு ஆதரவாகப் இந்த படைப்பிரிவினால் ஒரு போர்ப் பங்களிப்பை செய்யமுடிந்தது .
1985 இல், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துடன், இலக்கம் 2 படைப்பிரிவு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டது. 1986 இல் மற்றொரு HS 748 (Avro), விமானமும் ஐந்து SF 260 TP விமானமும் ,மேலும் இரண்டு Y-12 விமானங்களும் இந்த படைப்பிரிவில் இணைந்தன. புதிய விமானங்களுடன் படைப்பிரிவின் துருப்புக்கள் விஐபிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ,பிற வணிக போக்குவரத்து வான்வழி ஆய்வு நடவடிக்கைகள் என்பவற்றுக்கு அதன் பங்களிப்பை விரிவுபடுத்தியது.
1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ,இல . 2 போக்குவரத்து படைப்பிரிவு விரிவுபடுத்தி மறுசீரமைப்புடன் , அது இல . 201 கனரக போக்குவரத்து மற்றும் எண். 202 சாதாரண போக்குவரத்து படைப்பிரிவு என பிரிக்கப்பட்டது. அதன்படி,இல. 201 படைப்பிரிவில் HS 748 Avro, Y-8 மற்றும் Cessna 421 விமானங்களையும் , இல . 202 படைபிரிவு Y-12 மற்றும் பீச் கிங் விமானங்களைக் கொண்டிருந்தது. இலங்கை விமானப்படையால் 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி இலக்கம் 201 படையணியாக இலக்கம் 2 போக்குவரத்துப் படையணியாக மீண்டும் மாற்றப்பட்டதுடன் . எண். 202 படைப்பிரிவு எண். 8 இலகுரக போக்குவரத்துப் படை என மறுபெயரிடப்பட்டது மேலும் மூன்று AN -32B விமானங்கள் இல . 2 படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன.
தொடர்ந்து இல . 2 போக்குவரத்துப் படையின் வான் வலிமையை அதிகரிக்க நான்கு AN 32 (Antonov 32) விமானங்கள் 1996 இல் படையில் சேர்க்கப்பட்டன. அத்துடன் 2000 ஆம் ஆண்டில், அதிகரித்த போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரண்டு C-130 ஹெர்குலிஸ் விமானங்களையும் மூன்று AN 32 (Antonov 32) விமானங்களையும் மீண்டும் இந்த படைப்பிரிவு சேர்த்தது.
இலங்கை விமானப்படையின் விமான போக்குவரத்து சேவையில் 66 வருடங்களாக சிறந்த சேவையை வழங்கிய இலக்கம் 2 போக்குவரத்து படையணி.இராணுவ மற்றும் போர் சூழ்நிலைகல் போலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவசரகால அனர்த்தங்களின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் மூலமும், வெளிநாடுகளில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை அவர்களது நாட்டிற்கு கொண்டு செல்வதன் மூலமும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. தற்போது இந்த படைப்பிரிவிற்கு விங் கமாண்டர் சமரக்கூன் அவர்கள் தலைமை வகிக்கிறார்.