சீனவராய இலங்கை விமானப்படை கல்லூரியின் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
9:08pm on Monday 2nd October 2023
சீனவராய கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி பதவியை கையளிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி சீனக்குடா இலங்கை விமானப்படை  கல்லூரி கட்டளை அதிகாரியின்  அலுவலகத்தில் இடம்பெற்றது. சீனக்குடா  விமானப்படை அகாடமியின் பதில் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் என்எச்டிஎன் டயஸ் புதிய பதவியை விங் கமாண்டர் விஆர்எஸ் விதானபத்திரனவிடம் கையளித்தார்.  பதவியேற்ற பிறகு, தற்போது நடைபெற்று வரும் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரின் பயிற்சிநெறி  எண் 74ன் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கட்டளை அதிகாரி உரையாற்றினார்.

புதிய கமாண்டிங் அதிகாரி, விங் கமாண்டர் வி.ஆர்.எஸ். அதிகாரி விதானபத்திரன சீனவராய ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஹிகுராக்கொடை விமானப்படை தளத்திலுள்ள இலக்கம் 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை