விமானப்படையின் உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்
1:10pm on Wednesday 4th October 2023
"எல்லாவற்றையும் விட சிறுவர்கள் முக்கியமானவர்கள் " எனும் தொனிப்பொருளில் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் 2023 ம் ஆண்டுக்கான உலக சிறுவர் தினம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் பண்டாரகம " பேர்ல் பே " (Pearl Bay Water Park) ல் இடம்பெற்றது.
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் 1000 சிறார்கள் பங்கேற்றதுடன் சிறுவர்களுக்கான பல வேடிக்கை விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் நடாத்தப்பட்ட" குவன் ரந்தரு சித்தம் 2023 " சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய ஒவ்வொரு சிறார்களுக்கு பெறுமதியான பரிசுப் பொதியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படையின் தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர் சபை அதிகாரிகள் மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.