2023ம் ஆண்டுக்கான விமானப்படை ஹாக்கி இடைநிலை போட்டிகள்.
இடைநிலை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் 20 அக்டோபர் 2023 அன்று ஏகல விமானப்படை தளத்தில்  முடிவடைந்தது.பணிப்பாளர் பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இறுதிப்போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் அதே இடத்தில் இடம்பெற்றது.

ஆடவருக்கான 11-ஏ பிரிவில் இலங்கை விமானப்படை கொழும்புத் தளம் சம்பியன்ஷிப்பைக் கைப்பற்றியதுடன், தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சிப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றது.பெண்களுக்கான 7-ஏ பிரிவில் ஏகல விமானப்படை தளம்   வெற்றியீட்டியதுடன், சீனவராய விமானப்படை தளம்   இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.


இறுதிப் போட்டியைக் காண விமானப்படை ஹொக்கி அணியின் தலைவர் எயார் கொமடோர் ஷெஹான் விஜயநாயக்க, விமானப்படை விளையாட்டு சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை