கொக்கல விமானப்படை தளத்தின் 39வது வருட நிறைவுதினம்
12:23pm on Sunday 29th October 2023
கொக்கல இலங்கை விமானப்படை தளம்  தனது 39வது ஆண்டு நிறைவை 19 அக்டோபர் 2023 அன்று கொண்டாடுகிறது.கட்டளை அதிகாரி குரூப் கப்டன் ஜகத் கொடகந்தவினால் பரிசீலனை செய்யப்பட்ட சம்பிரதாய வேலை அணிவகுப்புடன் தின கொண்டாட்டம் ஆரம்பமானது. முகாமின் வளர்ச்சிக்கு பங்களித்த அனைத்து கடந்தகால கட்டளை அதிகாரிகளுக்கும் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும் கட்டளை அதிகாரி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். பின்னர், முகாம் வளாகத்தில் கட்டளை அதிகாரி, அனைத்து அலுவலர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் பங்கேற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து, கொக்கல கடற்கரையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியும், ஹபராதுவ மார்ட்டின் விக்கிரமசிங்க ஆரம்ப பாடசாலை மற்றும் ஹபராதுவ பொது மயானத்தில் சிரமதானமும்  இடம்பெற்றது.

அனைத்து சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் முகாம் மைதானத்தில் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் சிநேகபூர்வ கைப்பந்து போட்டி மற்றும் மதிய உணவுடன் ஆண்டு விழா நிறைவு பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை