விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை தியத்தலாவ விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
தியத்தலாவ விமானப்படை தளத்தின் வருடாந்த விமானப்படை தளபதி பரீட்சனை  கடந்த 2023 அக்டோபர் 27ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

வருகைதந்த விமானப்படை தளபதியை  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  சேனாதீர அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது  இதன்போது கடந்த வருடம் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கான தளபதி விருதும் வழங்கிவைக்கப்பட்டது.

அதன்பின்பு  விமானப்படை தளபதியினால் படைத்தள தலைமையகம் தொடக்கம் அணைத்து பிரவுகளும் பார்வையிடப்பட்டது   இறுதியாக விமானப்படை தளபதியினால் அனைவருக்கும் மத்தியில் உரைநிகழ்த்தப்பட்டதுடன்  இந்த படைத்தளத்தினை சிறப்பாக பராமரிப்பதற்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை