இலங்கை விமானப்படையினர் 43வது சிரேஷ்ட ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் திறமையை வெளிப்படுத்தினர்.
1:30am on Saturday 16th December 2023
43வது சிரேஷ்ட ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2023 டிசம்பர் 10ம் திகதி ரத்மலானை விமானப்படை ஸ்குவஷ் வளாகத்திள் இடம்பெற்றது.இலங்கையின் முன்னாள் தலைவரும் தலைமைத் தேர்வாளருமான ரியர் அட்மிரல் பாலித வீரசிங்க (ஓய்வு),இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.SL ஸ்குவாஷின் முன்னாள் தலைவர் எயார் கொமடோர் அஜித் அபேசேகர (ஓய்வு), புகழ்பெற்ற சர்வதேச பயிற்சியாளர் திரு. கோனார் டி குரூஸ் மற்றும் கடந்த தேசிய சம்பியனான திரு. சமன் திலகரத்ன ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் இது இலங்கை வீரர்களுக்கு சர்வதேச தரவரிசை புள்ளிகளைப் பெறுவதற்கும் அவர்களின் தற்போதைய சர்வதேச தரத்தை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது.இலங்கை விமானப்படையின் (SLAF) ஸ்குவாஷ் வீரர்கள் சம்பியன்ஷிப் போட்டியின் போது பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.