சிவனொளிபாதமலை உற்கட்டமைப்பு பணிகளுக்கு இலங்கை விமானப்படையின் பங்களிப்பு
9:53pm on Thursday 4th January 2024
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை வான் செயப்பாட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் மேற்பார்வையின்கீழ் கடந்த 2023 டிசம்பர் 18ம் திகதி சிவனொளிபாதமலைக்கான மின்சார வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளில் விமானப்படையின் இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவின் எம் ஐ 17 ஹெலிகாப்டர் மூலம் மலையின் உயமான இடங்களுக்கு உபகாரணம்கள் கொண்டு செல்லும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றது சிவனொளிபாதமலைக்கான நீர்விநியோகிக்கத்திற்கான மின்சாரம் வழங்கும் பணிகள் கடந்த 2023 டிசம்பர் 15ம் திகதி ஆரம்பமானது.
நான்கு நாள் செயல்பாட்டின் போது, விமானத்தின் பணியாளர்கள் மொத்தம் 9 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களை அர்ப்பணித்து 25 தடவைககள் செயற்ப்பாட்டை நிறைவேற்றினர். 25 தொன் எடையை நல்லதண்ணியா மைதானத்தில் இருந்து இண்டிகடுபான மற்றும் சிவனொளிபாத சிகரத்தில் உள்ள ரது அம்பலம ஆகிய இடங்களுக்கு சவாலான நிலைமைகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக விமானம் மூலம் கொண்டு சேர்த்தனர்.4 மின் மாற்றிகள், தண்ணீர் குழாய்கள், ஏராளமான இரும்பு மின் கம்பங்கள், மின்சார கம்பி டிரம்கள், சிமெண்ட், மணல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல்வேறு உபகரணங்கள் மற்றும் பொருட்களை விமானத்தில் ஏற்றுவதில் விமானப்படை விமானிகள் முக்கிய பங்கு வகித்தனர்.
விங் கமாண்டர் ரசங்க விஜேவர்தன இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 24 அதிகாரிகள் மற்றும் 71 விமானப்படை வீரர்களைக் கொண்ட தொழில்முறை குழுவுடன் முழு நடவடிக்கையையும் வழிநடத்தினார்.மேலும், இந்த நடவடிக்கையின் போது இலங்கை மின்சார சபையின் பணியாளர்களும் நல்லதண்ணியா பொலிஸ் நிலையத்தின் பொலிஸாரும் உதவிகளை வழங்கினர்.