விமானப்படை தீயணைப்பு மீட்பு குழுவினரால் நகர்ப்புற அவரசர நிலையை எதிர்கொள்வதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது
10:02am on Friday 5th January 2024
விமானப்படை  தீயணைப்பு மீட்பு குழுவினரால் நகர்ப்புற  அவரசர நிலையை எதிர்கொள்வதற்கான  ஒத்திகை  கொழும்பு நவம் மாவத்தையில் அமைதியதுள்ள டெவலப்மெண்ட் ஹோல்டிங் (பிரைவேட்) லிமிடெட் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டது இந்த பயிற்சியில் மொத்தம் 33 விமானப்படை தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.விமானப்படையின் பிரதான தீயணைப்பு அதிகாரி குரூப் கப்டன் டபிள்யூ.கே.ஏ.எஸ்.டபிள்யூ. விதான மற்றும்கட்டுநாயக்க, விமனப்படைத்தளத்தின் தீயணைப்புப் பள்ளி மற்றும் தீ டெண்டர் பராமரிப்புப் படைப்பிரிவு  கட்டளை அதிகாரி    விங் கமாண்டர் CP ஹெட்டியாராச்சி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த ஒத்திகை நிகழ்வுகள்  ஸ்குவாட்ரன் லீடர் பிஎச்எம்டி குணதிலக்க தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது தீயணைப்பு வீரர்கள் பல்வேறு மீட்பு யுக்திகளை காட்சிப்படுத்தினர், இதில் கயிறு ராப்பிலிங் மற்றும் டர்ன்டபிள் லேடர் மீட்பு வாகன செயல்பாடுகள் மற்றும் மூச்சுத்திணறல் கருவியைப் பயன்படுத்தி தீயணைக்கும் பதில் திறன்களை வெளிப்படுத்தினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை