விமானப்படையின் 73 வருடத்தை முன்னிட்டு மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்.
9:56am on Saturday 27th January 2024
இலங்கை விமானப்படையின் 73 வது  நிறைவு தினத்தை முன்னிட்டு " நற்பின் சிறகுகள் " எனும் செயர்த்திட்டத்தின் கீழ் இலங்கை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  அவர்களின் வழிகாட்டலின் கீழ் 73 வது விமானப்படை தின நிகழ்வுகள் வடமாகான மண்ணில்  நாடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதன் முதல் கட்ட திட்டமாக காங்கேன்சதுரை மயிலாட்டி வடக்கு  கலைமகள் மகா வித்தியாலயத்தில் அப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் ஒன்றுக்கான  அடிக்கல் நாட்டும் விழா 2024 ஜனவரி 06ம் திகதி காலை  பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  வட மாகான ஆளுநர் கௌரவ. PSM. சாரல்ஸ் அவர்கள் கலந்துகொண்டு இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்  மேலும் இந்த நிகழ்வில் விமானப்படையின் இந்த திட்டத்திற்கான பொறுப்பதிகாரியும்  விமானப்பொறியியல் பணிப்பாளர் நாயகமும் ஆனா எயார் வைஸ் மார்ஷல் முதித மகவத்தக்கே மற்றும் வட மாகான  தலைமை செயலாளர் திரு. சமன் பந்துலசேன மற்றும்  சிரேஸ்ட அதிகாரிகள்  விமானப்படை அதிகாரிகள் மற்றும் பாடசாலை  அதிபர் ஆசிரியர்கள் உற்பட  பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதன்  போது  "எனது புத்தக்கமும் வடக்கில்" எனும் கருப்பொருளின் கீழ்  73,000 புத்தகங்களையும் புத்தக வசதிகள் அல்லாத பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது அதன் முதல் கட்டமாக கலைமகள் வித்யாலயத்தின் பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களிடம்  விமானப்படை விமான பொறியியல் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் பாடசாலை புத்தகம் மற்றும் பாடசாலை பாதானிகளுக்கான 300 கூப்பனும் வழங்கி இந்தத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது  அதேபோல் 73000  வடக்கில் நடும் நோக்கில்  இதன் முதல் கட்டமாக நலமாக ஆனந்த ஒரு ஆளுநர் அவர்களினால் மரம் நட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை