குடும்பங்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை குவன்புறவில் புதிய பகல்நேர பராமரிப்பு நிலையம் திறந்துவைப்பு
5:54pm on Sunday 28th January 2024
கொழும்பு  விமானப்படை தளத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பகல்நேர பராமரிப்பு நிலையம்  கடந்த 2024 ஜனவரி 08ம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  உதேனி ராஜாக்ஷ  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  இனோகா ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்துவைக்கப்பட்டது .

விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக இலங்கை விமானப்படையின் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் ஆரம்ப கட்டத்தின் விளைவாக கொழும்பு விமானப்படை தளத்தில் புதிய பகல்நேர பராமரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது மற்றும் இலங்கை விமானப்படையில் உள்ள அதிகாரிகள் மற்றும் இதர நிலை சேவையாளர்கள்  நலன்புரி சேவையாக பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. பகலில் தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


இந்த திட்டத்திற்காக  நிதியுதவி  திருமதி அனுஷா தர்ஷி அவர்களினால் வழங்கப்பட்டது  மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், அவர்களது மனைவிகளுடன், கொழும்பு விமானப்படைதள கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் ருவன் சந்திமா மற்றும் கொழும்பு விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் பங்குபற்றினர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை